அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற அஞ்சல்மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உத்தியோகபூர்வமாக தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அத்தோடு, வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |