பொலிஸ் மா அதிபர் விவகாரம்: தேசபந்துவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த இடைக்கால மனுவின் உண்மை நிலையை உறுதிப்படுத்தும் திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிபர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை நீக்குமாறு கோரி தேசபந்து தென்னகோன் குறித்த மனுவை தாக்கல் செய்தார்.
திகதி அறிவிப்பு
இந்த இடைக்கால மனு இன்று (06) யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மனுவை வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு அழைத்து, உண்மை நிலையை சரிபார்க்கும்படி மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |