தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

Trincomalee Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 06, 2024 10:14 AM GMT
Laksi

Laksi

இந்த நாட்டில் உள்ள இனவாதம் என்னை ஜனாதிபதியாக வர விடாது என ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மூதூர் பட்டித்திடல் கிராமத்தில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இனவாதியும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருமே இம்முறை ஜனாதிபதியாக வரப்போகின்றார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

ஜனாதிபதி தேர்தல் 

இருப்பினும் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம் | Arianendrans Speech In Mutur

கடந்த காலங்களில் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். இம்முறையும் ஏமாற்றப்படுவதற்கு தயாராக இல்லை.

தமிழ் தேசிய பொதுக்கூட்டமைப்பு எடுத்த முடிவானது ஆரோக்கியமான முடிவென எம்மை சந்திக்கின்ற மக்கள் தெரிவிப்பதோடு அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் தயாராக உள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

பிரசார நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த எமது பிரசாரத்தை தற்போது திருகோணமலையில் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்கு சென்று தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம் | Arianendrans Speech In Mutur

இதற்கு முன்னர் பொத்துவில்- பொலிகண்டிப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். அவ்வாறே இதுவும் புள்ளடி இடுகின்ற போராட்டமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமனம்

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW