ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள்

By Shalini Balachandran Jul 26, 2024 05:39 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் என எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

வேட்பாளர் பட்டியல்

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள் | Sri Lanka Presidential Election 2024 Candidates

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் விமர்சகர்கள்

இதனிடையே, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW