இலங்கையின் மின்சார பரிமாற்ற அமைப்பில் நவீன மாற்றம்! அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையின் மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்கும் பணிகளை எரிசக்தி அமைச்சு துவங்கியுள்ளது.
இத்திட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர் குமார ஜயக்கொடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாடு மற்றும் செயல்திறன் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு உப மின்நிலையங்களை ஆய்வு செய்தபோது அவர் இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
தற்போது பத்தரமுல்லை மற்றும் கிரிந்திவெல் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய உப மின்நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.
மின்சார பரிமாற்ற திறன்
கிரிந்திவெல் பரிமாற்ற நிலையம் மேல் மாகாண மின்சார பரிமாற்ற திறனை 500 மெகாவாட் அதிகரிக்கும்.
அதே நேரத்தில் புதிய உப மின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய 63 மெகாவாட் திறனை மேம்படுத்தும்.
மேம்படுத்தப்பட்ட மின் வலையமைப்பு, மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமையும்.
அதோடு, கூரை சூரிய மின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள பெரிய அளவிலான புதுப்பிக்கக்கூடிய திட்டங்களுக்கு இடமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |