வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jul 22, 2025 03:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

எச்சரிக்கை

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Sri Lanka Heavy Rain Wind Warning July 22

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மோசமான திருடன் யார்?

மோசமான திருடன் யார்?

முட்டை விலை குறைகிறது..! நுகர்வோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

முட்டை விலை குறைகிறது..! நுகர்வோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW