நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை
Sri Lanka
Sri Lankan Peoples
Women
By Rakshana MA
இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் (Amintha Methsil) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய பிரச்சனை
1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |