பொத்துவிலில் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கிலுள்ள கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடல் பிராந்தியத்திற்கு அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடல் கொந்தளிப்பு
இதற்கிடையில், மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |