பாதாள குழுவின் கொலைகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும்! வலியுறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, பாதாள உலகக்கும்பல்களால் கொல்லப்படும் உயிர்களுக்கு பொறுப்பு கூறவேண் டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்தப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 10 மாதங்களாக பொய்களாலேயே தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
செய்மதி விவகாரம்
இதற்கு மத்தியில் தற்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
சிச்சியின் செய்மதி விவகாரத்தில் பிரதமரும், அமைச்சர் வசந்த சமரசிங்கவும் முரண்பட்ட கருத்துகளைக் கூறியதால் அவை பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் மறுபுறம் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக்கும்பலும் தலைதூக்கியுள்ளது.
நாளாந்தம் துப்பாக்கிச்சூடுகளால் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாதாள உலக குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது அப்போதைய அரசாங்கம் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, பாதாள உலகக் கும்பல்களால் கொல்லப்படும் உயிர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமின்றி அப்பாவி மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பொது வெளியில் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த அழிவு தொடர்பில் அரசாங்கத்தில் எவரும் வாய் திறப்பதில்லை என்றும் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |