தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Rukshy Sep 19, 2024 02:41 AM GMT
Rukshy

Rukshy

வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் 

வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய பணியாட்குழுவினர்,வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அலுவலர்கள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள்,ஜனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்! | Special Reports Commission During Election

இதேவேளை ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற ஒழுங்கமைப்புகளின் முகவர்கள் உள்நாட்டு/வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்களுக்கும் வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery