விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட தேவையுடையோர் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (14) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அடையாள அட்டை
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான விடயங்கள் குறித்து அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேவேளை, குறித்த தற்காலிக அடையாள அட்டையை விசேட தேவையுடையோரும் பெறுவதற்கு இம்முறை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |