ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 14, 2024 04:21 AM GMT

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் (13.08.2024) வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள இரு முஸ்லிம் வேட்பாளர்கள்

இந்த நிலையில் முஹம்மது இல்யாஸ், மொஹமட் இன்பாஸ் ஆகிய 2 முஸ்லிம் வேட்பாளர்களும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் | 2 Muslims Are Contesting The Presidential Election

இதேவேளை வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14.08.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW