கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

Gampaha Sri Lanka Water
By Rakshana MA Oct 22, 2024 05:18 AM GMT

நீர் விநியோக குழாய் திடீரென உடைந்ததன் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வத்தளை, மாபோல, ஜா எல மற்றும் கட்டுநாயக்க - சீதுவ நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பயகம, மஹர, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

நீர் விநியோகம் தடை

உயர் இடங்களுக்கு நீர் தடைப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும், நீர் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல் | Special Alert Water Supply To People Gampaha Dist

மேலும் இன்று (22) நண்பகல் 12 மணியளவில் பணிகள் நிறைவடைந்து நீர் விநியோகம் சீரமைக்கப்படும் எனவே மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நோய்வாய்ப்பட்டு ஊருக்குள் சுற்றித்திரியும் யானை

நோய்வாய்ப்பட்டு ஊருக்குள் சுற்றித்திரியும் யானை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW