ஒருதலைப்பட்சமாக செயற்பட்ட சபைத்தலைவர் : ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தல்களை புறக்கணித்து சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem) குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றையதினம்(27) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ஹக்கீம்,
தாம் உட்பட பல கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
ஒருதலைப்பட்சமான செயற்பாடு
மேலும், இந்தக் குழுவில் இடம் பெறுவது குறித்து ஜனாதிபதி உறுதியளித்ததாகவும், ஆனால் ரத்நாயக்க அந்த முடிவை நிராகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், என்னையும் சேர்த்துக்கொள்வதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். நீங்கள் அவரிடம் கேட்கலாம். ஆனால் அவரது முடிவிற்கு மாறாக நாங்கள் நீக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜே.வி.பி. மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது, ஆனால் ரத்நாயக்கவின் நிலைப்பாடு காரணமாக அவருக்கு குழுவில் பங்கு மறுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், ரத்நாயக்க குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது நிலைப்பாடு எதிர்க்கட்சி கொறடாவுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
அதுமட்டுமல்ல நான் எம்.பி.யை அச்சுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் அல்லது விசாரணை செய்து பின்னர் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவர் சபாநாயகருக்கு ரவூப் ஹக்கீம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |