கிழக்கில் தெங்கு பயிரிடும் செயற்றிட்டம் முன்னெடுக்க பிரேரணை
வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தெங்கு பயிரிடும் செயற்திட்டத்தை திருகோணமலையிலும் முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Mahroof) பிரேரணை முன்வைத்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று(26) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திரா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்ட திட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கிண்ணியா கரையோரங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், பெரிய கிண்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொமின் டவரை அங்கிருந்து அகற்றி மக்கள் செறிவு குறைந்த இடத்துக்கு மாற்றி அந்த இடத்தை கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு கையளிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புபடைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

