சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான புதிய தலைவர் தெரிவு
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தின் போதே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாகத்தெரிவு
மேலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை.அன்வர் ஸியாத்தும் பொருளாளராக சட்டத்தரணி எம்.எம்.எஃப்.ஷாமிலாவும் உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, கடந்த காலங்களில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
