தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

Ampara SL Protest Eastern Province
By Laksi Dec 13, 2024 10:31 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது  தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நேற்று (12) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

தீப்பந்தம் ஏந்தி போராட்ட

இதன் போது, மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் | South East University Students Protest In Oluvil

இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து ,தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக அழைக்கவும் , மாணவர்களை துன்புறுத்தாதே, மணவர்கள் மீதான அடக்கமுறை நிறுத்து, போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

மட்டக்களப்பில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டக்களப்பில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery