இலங்கையின் ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த தென்னாபிரிக்க அரசு விசேட கவனம்
இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த தென்னாபிரிக்க அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு உயர்ஸ்தானிகர் சென்டையில் எட்வின் ஷல்க் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர தொடர்பு
இதன்போது, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளை மேம்படுத்தல், நாட்டின் உற்பத்தித் துறையை பலப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் மற்றும் கல்வித் துறையில் மறுசீரமைப்புகளை தொடர்வது, மகளிர் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |