மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை
புதிய இணைப்பு
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று அவரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலமொன்றை பெற்றதன் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா (Renuka Perera) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (5) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |