திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

Trincomalee Ministry of Agriculture Climate Change Eastern Province Weather
By Laksi Dec 05, 2024 04:18 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை- வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பூநகர்-வளர்மதி விவசாய சம்மேளனத்தின் கீழ் இந்தமுறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக வேளாண்மைச் செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 2,000 ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைச் செய்கையானது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

விவசாயிகள் கோரிக்கை

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப் பெற்று வங்கிகளில் அடகுகள் வைத்து பெரும்போக செய்கை மேற்கொண்டபோதிலும் வெள்ளத்தினால் தமது நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Agricultural Activities Affected In Trincomalee

எண்ணெய் விசிறப்பட்டு பசளைகள் விதைத்தும் மழை வெள்ளத்தினால் தமது வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்து தாம் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெருகல் -பூநகர் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW