வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Money
By Laksi Jul 29, 2024 09:38 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதுடன் வட்டி வீதம் குறைகிறது, இந்த பயணத்தை தொடர்ந்து செல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எமக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லை. வேறு வழியிருந்தால் அதனையும் சொல்லுங்கள். பொய் சொல்லி காலம் கடத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயத்தை அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

நாட்டை முன்னேற்ற வழி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உதவிகள் கிடைக்கின்றன. நாட்டை முன்னேற்ற வழி கிடைத்துள்ளது. நாட்டு மக்களைப் போலவே இளையோரின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல் | Sl Rupee Rises Interest Rate Falls Ranil

இலட்சக்கணக்கில் இளையோர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது. நாம் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளின் நிலையை நாம் காண்கிறோம். அவ்வாறு ஏன் எம்மால் வாழ முடியாது. பொய்களை சொல்லிக்கொண்டிருந்தால் தான் இந்த நிலையில் இருக்கிறோம்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி

2048 பற்றி நான் பேசிய போது எதிர்கட்சியினர் ஏளனமாக சிரித்தார்கள். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 2048 ஆம் ஆண்டிலேயே ஐம்பது வயதை அடைவார்கள் என்பது எதிர்கட்சியினருக்கு விளங்கவில்லை.

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல் | Sl Rupee Rises Interest Rate Falls Ranil

நாட்டுக்கு இன்னும் பல முதலீடுகளை கொண்டு வர வேண்டும். தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். ஹோட்டல்களைக் கொண்டுவர வேண்டும்.

நாம் வலுவடைய வேண்டியது அவசியம். இன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 85 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.

இந்த தசாப்தத்தின் இடைப்பகுதியில் அதனை 350 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க வேண்டும். அதனை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை எம்மிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW