ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை சஜித்திற்கு வழங்க தீர்மானம்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீர்மானமானது இன்று (04) எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு
கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம், “சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பேரவை தீர்மானித்துள்ளது” என்றார்.
இதேவேளை, தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |