மட்டக்களப்பில் பாடசாலை அபிவிருத்தி குறித்து பிரதமரை சந்தித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கல்வி மற்றும் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு நேற்று (20) நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டம் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிழக்கு பாடசாலைகள் அபிவிருத்தி
மேலும், காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கல்வித்தந்தை C.W.W.கன்னங்கராவின் திட்டத்தின் கீழ் 1950-களில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை முழுமையாக புனரமைப்பது மற்றும் பாடசாலையின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதுண்டாகவும் ஹிஸ்புல்லாஹ் எம்.பி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலாக, பிரதமர் ஹரினி அமரசூரிய குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |