காசா மீது தரைவழி தாக்குதல் ஆரம்பித்த இஸ்ரேல்
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Rakshana MA
காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் ஏற்கனவே செயலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒப்புதலை வழங்கியிருந்த நிலையிலேயே தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரைவழி தாக்குதல்
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 60,000 மேலதிகப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |