இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Sri Lanka Ministry of Agriculture Dollars
By Laksi Jul 30, 2024 08:35 AM GMT
Laksi

Laksi

தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியின் காரணமாக 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மு தல் ஏப்ரல் வரை நாட்டின் ஏற்றுமதி வருமானம் 1,118.06 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தேயிலை, இறப்பர், தென்னை, இலவங்கப்பட்டை மற்றும் மிளகு போன்றவற்றின் ஏற்றுமதி மூலமே இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தோட்டப் பயிர்கள் மூலம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  முதல் ஏப்ரல் வரை  ஈட்டிய ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும்.

வத்தளையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு..!

வத்தளையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு..!

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இதன்படி, கடந்த வருடத்தின் முதல் நான்கு மாத கால ஏற்றுமதி வருமானத்தை விட இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 234 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு | Sl Increase In Export Earnings Horticulture Crops

அத்தோடு, இலங்கை தேயிலைத் தோட்டங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ள வீதிகளை இலங்கை தேயிலை சபையினால் ஒதுக்கப்பட்ட பணத்தில் புனரமைப்பதற்கான பணி உத்தரவை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW