முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

Sri Lanka Sri Lanka Cabinet Egg
By Mayuri Jul 30, 2024 04:40 AM GMT
Mayuri

Mayuri

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும், கேக் உள்ளிட்ட பேக்கரித் தொழிலுக்குத் தேவையான முட்டைகளை வழங்கவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் யோசனையொன்றை முன்வைத்திருந்தார். 

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

குறித்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி | Cabinet Approval For Import Of Eggs

முட்டை இறக்குமதி

2024-03-18 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது.

அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பு மூலம் 37 ரூபா என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் 30-04-2024 அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW