வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

Kandy Sri Lanka Hospitals in Sri Lanka
By Rakshana MA Dec 07, 2024 09:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

கண்டி தேசிய வைத்தியசாலையில் 18 வருடங்களாக சேவையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரத்திற்கு, வைத்தியசாலை அதிகாரிகளால் கண்கலங்கி பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரியாவிடை நிகழ்வு நேற்று06) கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கு குழுமியிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் CT ஸ்கேன் இயந்திரத்தின் மீது மலர்கள் வைத்து பிரியாவிடை வழங்கியதுடன், அங்கு உரையாற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் கண் கலங்கி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நீண்டகால பயன்பாடு

18 வருடங்களாக, இலட்சக்கணக்கான நோயாளர்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய குறித்த CT ஸ்கேன் இயந்திரம், ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் தமது தொழில்சார் அறிவைப் பெறுவதற்கு உதவியுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்! | Sincere Goodbye To Ct Mechine At Kandy Hospital

2006ஆம் ஆண்டு கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஸ்கேன் இயந்திரம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டி தேசிய வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளது.

பல வருடங்களாக இயங்கிய இந்த இயந்திரத்தை தற்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மரியாதையுடனான பிரியாவிடை வழங்குவதற்கு தாம் தீர்மானித்ததாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு சிறந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றும்போது, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்த இயந்திரத்தின் சேவை அறிந்த, இங்கு பணியாற்றிய மற்றும் பணியாற்றும் அனைவருக்கும் வேதனையான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

 

GalleryGalleryGalleryGallery