அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

Ampara Climate Change Eastern Province Weather
By Laksi Dec 07, 2024 05:50 AM GMT
Laksi

Laksi

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தடயந்தலாவ பிரதேச வேளாண்மை செய்கையை அம்பாறை (Ampara) மாவட்ட அரசாங்க அதிபர் சித்தக அபேவிக்ரம நேரில் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் நேற்று (6) மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால் தடயந்தலாவ நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 2800 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டிருந்த வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்திருந்தது.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

பிரச்சினைக்கு துரித தீர்

அத்துடன் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து வீதிகள் மற்றும் வயல் நிலங்கள் உடைப்பெடுத்து மணல் மேடுகளாக மாறியுள்ளதையும் அரசாங்க அதிபர் அவதானித்துள்ளார்.

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர் | Ampara Governor Visited The Flood Affected Farms

இதனையடுத்து மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் சித்தக அபேவிக்ரம கேட்டுக் கொண்டுள்ளார்.

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW