விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

Ampara Sri Lanka Accident
By Rakshana MA Dec 07, 2024 06:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து இன்று(07) இடம்பெற்றுள்ளது.

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

அரிய வகைப்புலி

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்துள்ளன.

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி | Different Tiger In Ampara

இந்த மீன்பிடிப்பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது. இவை தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் இம்மாவட்ட மக்கள் சிலர் குறித்த அரிய வகை புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGallery