நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Laksi Dec 06, 2024 10:07 AM GMT

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,761 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

டெங்கு மரணங்கள்

அத்தோடு, வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 5,068 நோயாளர்களும்  கண்டி மாவட்டத்தில் 4,940 நோயாளர்களும், , கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,612 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients Sl

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW