நிலா வெளியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை முன்னெடுப்பு
திருகோணமலை - நிலாவெளி பிரதேச சுற்றுலா கடற்கரை மற்றும் நீருக்கடியில் சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (26) முன்னெடுக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் இணைந்து கிராம மக்களும் கிராம அபிவிருத்தி சங்கம் பெருங்கடல் கடற்றொழிலாளர் சங்கம் நன்னீர் கலப்பு சங்கம் மற்றும் நிலாவெளி உல்லாச பிரயாணியின் படகு சங்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுற்றுலாத்தல வளர்ச்சி
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், நிலாவெளி சுற்றுலா தலத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
மேலும், இந்த நிலாவெளி கடற்கரையானது அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரக்கூடிய வகையில் காணப்படுவதுடன், இங்கிருந்து புறா தீவை நோக்கி பயணிகள் செல்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கடற் கரை சுத்தம் செய்வதனால் சிறந்ததொரு சுற்றுச் சூழலை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதில் சுற்றுலா சங்க தலைவர் குச்சவெளி நிலாவெளி பொலிஸ் பொருப்பதிகாரிகள் வெளிநாட்டவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











