இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Parliament of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka School Children
By Laksi Sep 10, 2024 06:35 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் வாழும் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயமானது குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, நாட்டில் வசிக்கும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

குறைபாட்டு நிலைமைகள்

 உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Shocking News About Children In Sri Lanka

இந்த அறிக்கையில், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் நடைமுறைபடுத்தலை கண்காணித்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW