கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் காட்சிகளால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!
காசாதான் ஹமாஸ், ஹமாஸ்தான் காசா ஹமாஸ் அரசைத் தவிர அங்கு வேறு எந்த அரசும் இல்லை என்று இஸ்ரேலின் இராணுவ ஆய்வாளர் யோஷி யெகோஷுவா(Yoshi Yehoshua) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்கா ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் கூறுவது போல, தாங்களாகவே விருப்பப்பட்டு காசா மக்கள் வெளியேறினாலே தவிர, அவர்களை வேறு ஒன்றும் செய்ய முடியாது.
இஸ்ரேலின் நிலவரம்
அத்துடன், மேற்கு கரையில் நிலவும் சூழல் அதைவிட மோசமானதாக காணப்படுகின்றது. இஸ்ரேல் எல்லையில் இருந்து வெறும் ஒரு மீட்டர் தொலைவில் உள்ளது துல்கரம், அங்கு ஹமாஸ் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பட்டாலியனை வைத்துள்ளது. ஜெனின் பட்டாலியனைப் போல துல்கரம் பட்டாலியன் தற்போது வலிமை பெற்றுள்ளது.
மேலும், சைரன் ஒலிதான் காலை எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுகின்றது தொடர்ந்து நான்கு மணி நேரம் சைரன் ஒலிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான அமைச்சர் இத்தாமிர் பென்கிவிர் கருதது தெரிவிக்கையில்,
நாம் முழு வெற்றியைப் பெறவில்லை என்பதோடு, முழு தோல்வியைப் பெற்றுள்ளோம் என்பதைத்தான் காசாவில் இருந்து வரும் புகைப்படங்கள் நமக்கு காட்டுகின்றன கைதிகள் பரிமாற்றம் நாம் சரணடைதலை நோக்கிக் கொண்டு சென்றுள்ளது என கூறியுள்ளார்.
அதே நேரம் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிகோர் லிபர் மேன் கூறும்போது, நாம் காசாவை விட்டு எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என்பதைத்தான் அங்கிருந்து வரும் காட்சிகள் காட்டுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசாலில் ஸ்மோட்ரிச் கூறும்போது, இந்த பரிமாற்ற ஒப்பந்தத்திற்காக நாம் கொடுத்துள்ள விலை கவலை அடைய வைக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் கைதிகள் மூன்று பேர் கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகள் 32 பேர் மற்றும் 30 குழந்தைகள் என 110 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
கைதிகள் விடுவிப்பு
இந்த நிலையில், காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து 183 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
காஸாவில் இன்று நான்காவது கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதோடு மூன்று இஸ்ரேலியர்களை இன்று விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் 50 பலஸ்தீனர்கள் எகிப்துடன் மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், மேற்குகரைப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஜெனின், துல்கரேம் அகதி முகாம்கள் உள்ளிட்ட பிற பலஸ்தீன சமூகத்தினரையும் குறி வைத்துக் கடந்த வாரத்தில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |