அதிக விலைக்கு பொருள் விற்பனை: வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்தோடு ,கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை சந்தையில் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனை நிலையங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |