கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (21 ) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, கல்முனைக்குடி 9 பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவர் கைது
அத்தோடு, கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேகநபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள்கள் மீட்பு
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த சில தினங்களாக இந்தப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள்கள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |