இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல இலட்சம் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் : ஒருவர் தலைமறைவு

Sri Lanka India Crime
By Independent Writer Jul 27, 2024 03:29 AM GMT
Independent Writer

Independent Writer

இராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5.70 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதோடு, தலைமுறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர்பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

தீவிர சோதனை

இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளருக்கு இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது மடத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல இலட்சம் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் : ஒருவர் தலைமறைவு | Seizure Lakhs Relief Pills Smuggled To Sri Lanka

இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந் 10 பெட்டிகள் கைபற்றப்பட்டது.

அதனை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதனை எடுத்து அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5.70 லட்சம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

சந்தேக நபர்

இதனையடுத்து வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக இராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல இலட்சம் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் : ஒருவர் தலைமறைவு | Seizure Lakhs Relief Pills Smuggled To Sri Lanka

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு இன்று இரவு படகுமூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கு வந்துள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.1.80 கோடி எனவும் சர்வதேச மதிப்பு மூன்று கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பில் வெளியாகிய முன்னறிவிப்பு

வானிலை தொடர்பில் வெளியாகிய முன்னறிவிப்பு

மக்களை ஏமாற்றி பணமோசடி! வெளியாகியுள்ள தகவல்

மக்களை ஏமாற்றி பணமோசடி! வெளியாகியுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW