உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Nalin Fernando Egg
By Chandramathi Jul 27, 2024 02:24 AM GMT

மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என்று உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலையை 38 ரூபாவாக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Egg Price Is Reduced To 38 Rupees

முட்டை இறக்குமதி

முட்டை உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்டி வருவதால், இந்த நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் மூன்று நாள்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.