மக்களை ஏமாற்றி பணமோசடி! வெளியாகியுள்ள தகவல்
பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் நகரை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 15,000க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாமல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தி, குறித்த பகுதியில் வல்லப்பட்டை செடி வளர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக விளம்பரம் செய்து இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றப்பட்ட மக்கள்
ஒரு வல்லப்பட்டை செடிக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து, பிரமிட் திட்டம் என்று தெரியாமல் பணத்தை முதலீடு செய்ததாகப் ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தை முதலீடு செய்த 300 நாட்களில் முழுத்தொகை வழங்கப்படும் என்றும், குறைந்த தொகையாக முப்பதாயிரம் ரூபாய்க்கு நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் செலுத்தப்படும் என்ற அடிப்படையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த மோசடி தொடர்பில் குருநாகல் தலைமையக பொலிஸ், இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |