நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்: பெற்றோருக்கு அறிவுறுத்தல்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு சில பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தங்களினால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
அத்தோடு, இதனால் பிள்ளைகள் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் உழைப்பு இல்லாமை போன்ற பல உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோருக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வைத்தியசாலையிலிருந்தும் பல நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளின் மன நிலையை பாதிக்காமல் அவர்களின் கல்விக்கு ஆதரவாக பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |