ஜனாதிபதித் தேர்தல்: ஆயிரத்தை தாண்டிய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 29, 2024 10:46 AM GMT

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேய இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்ட மீறல்

அதன்படி, தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 1,285 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஆறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல்: ஆயிரத்தை தாண்டிய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை | Election In Sri Lanka

அதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 113 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW