மட்டக்களப்பில் தொழிற்கல்வி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Batticaloa Tourism Eastern Province
By Laksi Aug 29, 2024 09:27 AM GMT
Laksi

Laksi

 தொழிற்கல்வி கற்கைநெறிகளை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பயிலுனர்களை கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது எபெக்ஸ் கெம்பஸ் மொழி மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பூரண அனுசரணையுடன் கைத்தொழில் அபிவிருத்தி சபை மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்துடன் இணைந்து மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை தவிசாளர் சாரங்க அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

சஜித் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: ஹரீஸ் எம்.பி

சஜித் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: ஹரீஸ் எம்.பி

சான்றிதழ்கள்

தேசிய ரீதியாக சாதனையீட்டிய தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை, பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி முகாமைத்துவம் போன்ற பாடப்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பில் தொழிற்கல்வி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் | Certificate For Completion Of Vocational Courses

அத்தோடு,  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளைக் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "கிழக்கு மாகாண சுற்றுலா மையம்" செயற்றிட்டத்தில் உள்ள 20 தொழில் முயற்சியாளர்கள் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான நிதி, தொழில் விருத்தி செய்வதற்கான வழிவகைகளும் எபெக்ஸ் கெம்பஸ் மொழி மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தினால் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுற்றுலா நிலைய பிரதம நெறிப்படுத்துனர் , கைத்தொழில் அபிவிருத்தி சபை கிழக்கு மாகாண பணிப்பாளர், எபெக்ஸ் கெம்பஸ் தவிசாளர் , கைத்தொழில் அபிவிருத்தி சபை மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW