அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Sri Lanka Lanka Sathosa Economy of Sri Lanka
By Laksi Aug 02, 2024 07:40 AM GMT
Laksi

Laksi

நாட்டில் இன்று (2) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறித்த விலைக்குறைப்பை லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது.

அதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது), வெள்ளை கௌப்பி, பெரிய வெங்காயம் (இந்தியா),  சிவப்பு கௌப்பி, கீரி சம்பா, சிவப்பு சீனி , சிவப்பு பருப்பு , வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது

புதிய விலைகள்

குறித்த விலைக் குறைப்பின் படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை (சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது) 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 240 ரூபாவாக உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு | Sathosa Reduces Price Of Several Food Items

அத்தோடு, ஒரு கிலோகிராம் வெள்ளைக்கௌப்பியின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 998 ரூபாவாக உள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை (இந்தியா) 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 265 ரூபாவாக உள்ளது.

அத்தோடு, ஒரு கிலோகிராம் சிவப்பு கௌப்பியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 940 ரூபாவாக உள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை

எதிர்வரும் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை

விலை குறைப்பு

இதேவேளை, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 254 ரூபாவாக உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு | Sathosa Reduces Price Of Several Food Items

மேலும்,  ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 370 ரூபாவாக உள்ளது.

அத்தோடு, ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 285 ரூபாவாக உள்ளது. 

இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 254 ரூபாவாக உள்ளது.

இந்த நிலையில், குறித்த விலை மாற்றங்கள் இன்று (2) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

Gallery