அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 02, 2024 05:13 AM GMT
Laksi

Laksi

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதன் காரணமாக அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் உணவு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

அறிவியல் ஆய்வு

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாளாந்தம் 200 கிராம் அரிசியை உணவாக மூன்று வேளை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும்.

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Rice Is Danger Sl Doctor Warns For Peoples

உணவு சில நோய்களை குணப்படுத்தும் என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.ஒரு குறிப்பிட்ட நோயை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினால் முறையான அறிவியல் ஆய்வு நடத்தி, நாட்டின் முக்கிய உணவு அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது

ஊட்டச்சத்து குறைபாடு

மேலும், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, ஆற்றல் போன்றவை உணவில் இருந்து பெறப்படுவதாகவும், நோய்களைக் குணப்படுத்த உணவல்ல மருந்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆனந்த ஜயலால் கூறினார்.

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Rice Is Danger Sl Doctor Warns For Peoples

ஒருவர் வாரத்திற்கு 2.8 கிலோகிராம் அரிசி, 32 கிலோகிராம் கோதுமை மா, 12 கிலோகிராம் ரொட்டிமா மற்றும் 24 கிலோகிராம் சீனி சாப்பிடுகிறார். இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உணவை பன்முகப்படுத்த வேண்டும், இல்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட புதிய அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட புதிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW