ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட புதிய அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சி எடுத்துள்ள முடிவு
நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம் என கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதை கட்சியே தீர்மானிக்க வேண்டும்.நான் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.