எதிர்வரும் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை

Ministry of Health Sri Lanka Sri Lanka Food Crisis
By Mayuri Aug 02, 2024 05:38 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனவரி முதல் கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தவறான பிரச்சாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில், உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது.

எதிர்வரும் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை | Women Are Banned From Appearing In Advertisements

ஒருவர் வருடத்திற்கு 150 கிலோகிராமிற்கும் அதிகமான அரிசியை உண்பதாகவும், வாரத்திற்கு 2.8 கிலோ உண்பதாகவும், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற உணவுகளால் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW