மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம் : உறவினர்களிடம் கையளிப்பு
சம்மாந்துறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் இன்று(17) பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை (15) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 3 நாட்களுக்கு மேலாக காணப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏறாவூரைச் சேர்ந்த மரைக்கார் அப்துல் வசீர் (வயது 55) என்பவராவார். இவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் கடை வேலைகளை முடித்துவிட்டு கடையறைக்குள்ளே துங்கிய வேளையிலே இவ்வாறு இறந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் பார்வையிட்டு குறித்த மரணம் தொடர்பில் காரணத்தை ஆராய்வதற்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணையை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஏற்கனவே கடந்த வருடம் 3 மாரடைப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிதத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



