ஸலவாத்து ஓதுவதின் நன்மைகள்

Islam
By Fathima Jul 11, 2025 07:21 AM GMT
Fathima

Fathima

அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அந்த நபீ மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள். ​​ (அல்-குர்ஆன் 33-56)

ஸலவாத்து ஓதுவதால் சூழ்ச்சியாளர்களை விட்டு பாதுகாப்பும், நோக்கங்களில் வெற்றியும் கிடைக்கிறது.

ஈருலகத்தின் சகல பரக்கத்துக்களையும் சீர்த்திருத்தங்களையும், நன்மைகளையும், அல்லாஹ்வின் நெருக்கத்தையும், உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பையும் அடைய பலன் மிகுந்த அனுபவப் பூர்வமான அமலாக இருக்கிறது.

ஸலவாத்து சொல்வது எப்படி?

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்மதுல்லஹி அலைஹி) அறிவித்தார்கள் என்னை கஅப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) சந்தித்து, ”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

நான், ”ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன்.

ஸலவாத்து ஓதுவதின் நன்மைகள் | Salawat Explained In Tamil

உடனே அவர்கள், ”நாங்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம், ”தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்)

ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்” என்று கேட்டோம். ​

அதற்கு அவர்கள்,

”இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்”

என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.

ஸலவாத்து ஓதுவதின் நன்மைகள் | Salawat Explained In Tamil

மனிதர்கள் அடையும் பாக்கியங்கள்

ஸலவாத்து ஓதும் அடியான் மீது அல்லாஹ் த ஆலா ஸலவாத்து சொல்கிறான்(அருள்புரிகிறான்).

அவனுடைய மலக்குகளும் ஸலவாத்து சொல்கிறார்கள்.

ரசூல்(ஸல்) அவர்களும் அவரின் மீது ஸலவாத்து சொல்கிறார்கள்.

ஸலவாத்து ஓதுபவரின் தவறுகளுக்கு அது பரிகாரம் ஆகிறது.

அவருடைய அமல்களை பரிசுத்தப்படுத்துகிறது.

அவருடைய அந்தஸ்துகள் உயர்த்தப்படுகிறது.

அந்த ஸலவாத்தே அவருக்காக மன்னிப்பு தேடுகிறது.

ஸலவாத்து ஓதுபவருடைய செயலேட்டின் ஒரு கீராத் அளவு நன்மை எழுதப்படுகிறது(ஒரு கீராத் என்பது உஹது மலையளவுக்கு சமமானது)

எவர் தனது சகல துஆக்களையும் ஸலவாத்தாகவே செய்து கொள்வாரோ, அவருடைய இம்மை மறுமையின் காரியங்களுக்கு அதுவே போதுமானதாக ஆகிவிடுகிறது.

சிறப்புமிக்க அமலாக இருக்கிறது.