உளூ(Wudu) செய்யும் முறை
தொழுவதற்கு முன் சுத்தம் மிக அவசியமாகும், அந்த சுத்தத்திற்கு உளூ என்று சொல்லப்படும்.
1. அல்லாஹ்வை சந்தோஷப்படுத்துவதற்காகவும், சுத்தமாவதற்காகவும் உளூ செய்கிறேன் என்று நிய்யத் செய்வது.
2. சுத்தமான தண்ணீரால் உளூ செய்வது.
3. பிஸ்மில்லாஹ் கூறி தொடங்குவது.
4. இரு கைகளையும் மணிக்கிட்டு வரை கழுவுவது.
5. மிஸ்வாக் செய்வது, மிஸ்வாக் இல்லையெனில் விரலால் பல் துலக்குவது.
6. மூன்றுமுறை வாய் கொப்பளிப்பது.
7. மூன்றுமுறை நாசிக்கு தண்ணீர் செலுத்தி, இடது கை சுண்டு விரலால் மூக்கை சுத்தம் செய்வது.
8. மூன்றுமுறை முகம் கழுவுவது, ஒரு காதின் சோணை முதல் மற்றொரு காதின் சோணை வரையும், முன்நெற்றி முடியிலிருந்து தாடையின் கீழ் வரையும் கழுவுவது.
9. மூன்றுமுறை இரண்டு கைகளையும், முழங்கை வரை கழுவுவது. முதலில் வலது கையும், பிறகு இடது கையும் கழுவுவது.
10. கைகளைத் தண்ணீரில் நனைத்து, தலை முழுக்க மஸஹ் செய்வது. பிறகு காதுகளையும், பிடரியையும் மஸஹ் செய்வது.
11. மூன்றுமுறை இரண்டு கால்களையும் கரண்டை உட்பட கழுவுவது. முதலில் வலது காலையும், பிறகு இடது காலையும் கழுவுவது. மேலும் விரல்களை கோதியும் விடுவது.
12. முகம், கை, கால் ஆகியவற்றை நன்றி தேய்த்துக் கழுவுவது.
13. உளூ செய்த பிறகு துஆ ஓதுவது.