தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம்:ரிஷாட் பகிரங்கம்

Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 02, 2024 01:16 PM GMT
Laksi

Laksi

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் இன்று காலை (02) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர், மேலும் தெரிவித்ததாவது; “சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள மக்கள் அலையைத் தடுத்து, திசை திருப்ப எந்த வேட்பாளர்களாலும் இனி இயலாது. எஞ்சியுள்ள காலங்களிலும் சஜித்துக்கான ஆதரவு அலைகள் உச்சம் தொடவுள்ளன.

ஆட்சியைக் கைப்பற்றியதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்: ரிஷாட் பதியுதீன்

ஆட்சியைக் கைப்பற்றியதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்: ரிஷாட் பதியுதீன்

ஜனநாயகத்தின் பெறுமானம்

இந்நிலையில், வங்குரோத்து வாய்வீரர்களைக் களமிறக்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்படுகிறது.

இந்த மண்ணுடனும் பிரதேசத்துடனும் பரிச்சயம் இல்லலாத பலர் வந்து வழங்கும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். யுத்தம் முடிந்த பின்னர், இப்பகுதிக்கு நானே வந்தேன். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் அமைச்சராகவும் பல வேலைகளைச் செய்தேன்.

தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம்:ரிஷாட் பகிரங்கம் | Sajith Meet For Rishad

மனச்சாட்சி உள்ளவர்கள் இவற்றைச் சிந்தித்து, நாம் ஆதரிக்கும் வேட்பாளர் சஜித்திற்கே வாக்களிக்க வேண்டும்.

எஞ்சியுள்ள நமது அபிவிருத்தி வேலைகளைப் பூர்த்தி செய்ய, சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதியாக்க வேண்டும். தோற்கப்போவோருக்கு வாக்களித்து, ஜனநாயகத்தின் பெறுமானத்தை சீரழிக்காதீர்கள்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

சஜித்திற்கு ஆதரவு

நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது.கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாதமும் இறுமாப்புமே நமது பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கியது. விரட்டப்பட்ட கொடுங்கோலனின் எஞ்சிய ஆட்சிக்காலத்திலும் இனவாதிகளே இணைந்துள்ளனர்.

தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம்:ரிஷாட் பகிரங்கம் | Sajith Meet For Rishad

 இதையறிந்துதான், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது. சமூகம்சார் கட்சிகளின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டு, சமூகத்தை காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்.

சஜித்தை தோற்கடிப்பது கொடுங்கோலனின் சகபாடிகளையே பலப்படுத்தும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிஷாந்த மற்றும் ஸ்ரீபால ஆகியோர் எம்முடன் இணைந்தமை இதனையே உணர்த்துகிறது” என்றார்.

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW