புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது நேற்று (17) இரவு புத்தளம் நுரைச்சோலை நகர மத்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தற்பொழுது சிலருக்கு என்.பி.பி கட்சியின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் ஜனாசா
கோவிட் காலத்தில் முஸ்லிம்களுக்காக வெள்ளைத் துணிகளை ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். அநுர குமார திசாநாயக்க முஸ்லிம்களின் ஜனாசாவை எரிப்பதற்கு துணை போனார்.
கெஹெலிய ரம்புக்கல பாரிய மருந்து ஊழலில் கைது செய்யப்பட்டார். மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து பாரிய கஷ்டத்திற்கு மத்தியில் கெஹெலிய ரம்புக்கலவை கைது செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்தனர்.
வாக்குகள்
அப்படியென்றால் அப்போதே அநுரகுமார திசாநாயக்க குறித்த மோசடிகளை நிறுத்துவதற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருக்கலாமே என்று விமர்சித்தார்.
அத்துடன் சஜித் பிரேமதாச முதல் இடத்தில் இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாகவும் தெரிவித்து ரணிலுக்கு வாக்களிப்பது எந்த ஒரு பிரியோசனமும் இல்லையென்றும் தெரிவிப்பதால் அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாக்குகள் கூடும் என்றும் கூறினார்.
அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் ஈவிசாவில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபா கொள்ளையிடப்பட்டதாகவும் இதற்கு எதிராக ரவுப் ஹகீம், பாட்டாளி சம்பிக்க ரணவக்க, மற்றுமொருவர் இட்ட வழக்கினால் ஆராயப்பட்டு குறித்த களவுகள் தடுக்கப்பட்டன. இதனை தடுப்பதற்கு அநுரகுமார திசாநாயக்க முன்வந்திருக்கலாமே என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |